Language
slider--img

புரட்சியாளர். சீர்திருத்தவாதி. மனிதநேயர்.

sign--img

பெரியார் ஈ வெ இரா

கடந்த ஆயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் மங்காப் புகழ் பெற்று விளங்கும் சமூகச் சீர்திருத்தவாதி தந்தை பெரியார். ஜாதி இழிவை ஒழிக்கவும் சமுதாய மறுமலர்ச்சிக்காகவும் அயர்ச்சின்றி அச்சமின்றி அவர் நடத்திய போராட்டங்கள் ஈடு இணையற்றவை. பிறப்பால் எந்த ஒரு மனிதனும் தாழ்த்தப்பட்டுவிடக் கூடாதென்று வலியுறுத்தி வந்த பெரியார் சமத்துவமும் சகோதரத்துவமும் தழைக்க வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.

1925ஆம் ஆண்டில் அவர் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். 1944ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்தை அமைத்தார். மானுடத்திற்கு அவர் வழங்கிய அருட்கொடை மானம், மரியாதை, பகுத்தறிவுச் சிந்தனை, சமூகநீதி மற்றும் பகுத்தறிவு கொள்கைகளை பரப்ப அயராது பாடுபட்டார் அவர். ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று முழங்கினார்.பெரியார் நடத்திய பெரும் போராட்டத்தின் விளைவாகவே இந்திய அரசியல் சாசனத்தில் முதன் முதலாக 1951ஆம் ஆண்டில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. அதன் மூலமாகவே சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டிருந்த வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மனிதனுக்கு சுயசிந்தனை மிகவும் அவசியம் என்று நம்பியவர் பெரியார். தன் சொற்பொழிவுகளாலும், கட்டுரைகளாலும் மக்களின் அறியாமையைப் போக்கியவர் அவர்.


profile--img

சமூக நீதி நாள்

 • 1879

  ஈரோட்டில் வெங்கிட்ட (நாயக்கர்) சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகனாகத் தோன்றினார். தமையனார்: ஈ.வெ.கிருஷ்ணசாமி தங்கைகள்: பொன்னுத்தாயி, கண்ணம்மாள்.

 • 1904

  தந்தையார் கண்டிப்புக்கு அஞ்சி, வீட்டைவிட்டு வெளியேறி, துறவுக் கோலம் பூண்டு, விஜயவாடா, காசி, கல்கத்தா முதலிய இடங்களில் சுற்றித்திரிந்து பரந்த அனுபவம் பெற்றார்.

 • 1918

  காங்கிரஸ் மாநாடுகளை முன்னின்று நடத்தினார். ஈரோடு நகர்மன்றத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றியதுடன், குடிநீர்த்திட்டம், சுகாதார வசதி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார்.

 • 1923

  சேலம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார். நிறைவேற்ற இயலவில்லை.

பகுத்தறிவுப் பார்வையுடன் எந்த ஒரு விசயத்தையும் அணுகவேண்டும் என்று எப்போதும் கூறி வந்தார். மனிதன் தன் அனுபவங்களைக் கொண்டு சமுதாயம் மேம்பட பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். சமூகப்புரட்சிக்கான போர்க் கருவியாகவும் சமூக வளர்ச்சிக்கான வித்தாகவும் இருந்தது பெரியாரின் சிந்தனைச் செறிவு. பெரியாரின் அறிவுக் கூர்மையும் தொலை நோக்குப் பார்வையும் அவர் அறிவியல் அடிப்படையில் சிந்தித்த ஒரு தலைவர் என்பதையே உணர்த்துகிறது.

அய்.நா. சபையின் உறுப்பு அமைப்பான ”யுனெஸ்கோ” வின் சென்னை கிளை அமைப்பான “யுனெஸ்கோ மன்றம்” 27.06.1970 அன்று பெரியாருக்கு விருது வழங்கி கவுரவித்தது. “பெரியார் – புது உலகின் தொலை நோக்காளர்” என்ற வாசகம் அந்த விருதின் மீது மிகவும் பொருத்தமாக பொறிக்கப்பட்டிருக்கிறது.

எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கும் வகையில் சமுதாயத்தில் சமத்துவம் தழைக்க போராடியவர் பெரியார். எல்லோருக்கும் பாரபட்சமின்றி கல்வி கிடைக்க வேண்டும் என்றார். ஜாதிபாகுபாடுகள் ஒழிய குரல் கொடுத்தார். மதவெறியையும் மூடநம்பிக்கைகளையும் கடுமையாக எதிர்த்தார். கடவுளை கற்பித்தவன் மனிதன் என்றார். ஆத்மா, விதி, மறுபிறவி - இவற்றையெல்லாம் மறுத்தார்.

"எனக்கு எந்தப்பற்றும் இல்லை. எனக்குள்ள பற்று அறிவுப்பற்று. வளர்ச்சிப்பற்று – மானிடப்பற்று” என்று பலமுறை கூறியுள்ளார். எதற்காகவும் எவருடனும் சமரசம் செய்து கொள்ளாதவர் பெரியார். எல்லா எதிர்ப்புகளையும் மன உறுதியுடன் எதிர் கொண்டார்.

பெண் விடுதலைக்காகப் போராடியவர் அவர். வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தவராக இருந்தும் ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இறுதிவரை போராடினார். ஜாதிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். உயர்ந்த ஜாதியில் பிறந்தவராக இருந்தும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நலத்திற்காக தீவிரமாகப் போராடினார். ஒடுக்கப்பட்ட மக்களின் இழிவை ஒழிப்பதே என் முதல்பணி என்று முழங்கி வந்தார் அவர்.

திராவிடர்

flag--img

கழகம்

1946ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட திராவிடர் கழகக் கொடி கருப்பு நிறத்தில் இருந்தது. நடுவில் ஒரு சிகப்பு நிற வட்டம் அமைக்கப்பட்டிருந்தது. 3:2 என்ற விகிதத்தில் இருந்தன இரு நிறங்களும். இந்து மதத்தினரால் நீண்ட காலமாக திராவிடர்கள் இழிவுபடுத்தப்பட்டு வந்துள்ளதையும் நியாயமான உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளதையும் கொடியின் கருப்பு நிறம் உணர்த்துகிறது. மக்களுடைய அறியாமையையும், மூடநம்பிக்கைகளையும் அழித்து அவர்களை மீட்க கழகம் போராடி வருவதை சிகப்பு வட்டம் உணர்த்தியது. மனவளமும், பொருள் வளமும் பெற்று, முழு சுதந்திரத்துடன் திராவிடர்கள் வாழ நடைபெறும் போராட்டங்களையும் அந்த சிகப்பு நிறம் உணர்த்திற்று. பண்பாடு மற்றும் சமூகம் சார்ந்த சுரண்டல்களிலிருந்து திராவிடர்களை விடுவிக்க நிகழும் போராட்டங்களையும் கூட அந்த சிகப்பு நிறம் மறைமுகமாக உணர்த்தியது. திராவிடர் கழகத்தின் கொடியின் நிறங்களே இப்படி கழகத்தின் கொள்கைகளை சொல்லாமல் சொல்லும்படி அமைந்திருந்தன.

சமூகப் புரட்சிக்கு வித்திட்ட பல நூல்கள் நிறைந்த கருவூலம் எல்லோரையும் வரவேற்கிறது.

நூல்கள்

கலைக்காட்சிக் கூடம்

அபூர்வமான நினைவுகளின் தொகுப்பு. கொள்கைகளையும் கட்சிக் கோட்டுபாடுகளையும் கடந்து நிலவிய நட்புக்குச் சான்று. கருத்து வேறுபாடுகளையும் மீறி பெரியார் பலரை நேசித்தது பற்றியும் பலரால் அவர் நேசிக்கப்பட்டது பற்றியும் தெரிந்து கொள்ள உதவும் காட்சிக் கூடம் இது.

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்

psrpichennai@gmail.com

இணைந்திடுங்கள்