Language

திராவிடர் கழகம்

ஒரு புரட்சியின் மலர்ச்சி

திராவிடர் கழகத்தின் சாதனைகள்

பெரியாரின் தத்துவங்கள், வாழ்க்கை நிகழ்வுகள், அவரது பொதுத் தொண்டு கொள்கைப் பயணங்கள் ஆகியவை பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வினா - விடை நூல் வெளியிடப்பட்டு கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ’பெரியார் ஆயிரம்’ என்னும் தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பெரியார் நடத்திய கள்ளுக்கடை மறியல் போராட்டம் மறக்க முடியாதது. ஈரோட்டில் 1922ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு இது. தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார் பெரியார் - அவை, கள் உற்பத்திக்கு வழி வகுக்கும் என்பதால்.

கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் உள்ள பிரதான கோயிலைச் சுற்றி நான்கு வீதிகள் இருந்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அந்த வீதிகளில் நடந்து செல்ல அனுமதி இல்லாமல் இருந்தது. பெரியாரின் போராட்டத்தால் தடை நீங்கியது. வைக்கம் போராட்டம் வைக்கம் வீரர் என்ற பெருமையை அவருக்குப் பெற்றுத் தந்தது.

தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற திராவிடர் கழகம் போராடியது.

வகுப்புரிமைக்கான போராட்டம், ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு, கதர் ஆடை பிரச்சாரம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம், குடும்பக் கட்டுப்பாடு ஆதரவுப் பிரச்சாரம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், நாடு முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் அமைப்பு, இலவச மருத்துவமனைச் சேவைகள் - இப்படி பல சாதனைகள் என்று நீண்ட பட்டியலிட முடியும்.

பெரியாரின் மறைவுக்குப் பின் கழகப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு அரிய பணியாற்றினார் மணியம்மையார். அதன் பின் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று இன்று வரை பெரியாரின் அடியொற்றி அருந்தொண்டாற்றி வருகிறார். திராவிடர் கழகம் பெரியாரை பொதுமைப்படுத்தும் முயற்சியில் வெற்றிபெறப் போகிறது. உலக வரலாற்றில் திராவிடர் கழகத்திற்கு சிறப்பான இடம் உள்ளது.

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

psrpichennai@gmail.com

இணைந்திடுங்கள்